பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

குழூஉக்குறி

முறி,
துருவம்(வாச்சை),
காளை(எசவு),
தொழுவு,
பனையம்,
தட்டை,
பொருத்து,
ஆழி,
வலுவு,
தாயம்,
துருவம்...

பள்ளிப்பக்கம்
ஒதுங்காத
தம்பான்
சரளமாக
மாட்டை விலை
பேசிக்கொண்டிருந்தான்.

அரைலட்சம் சம்பளத்தில்
பேராசிரியர் சொன்ன
குழூஉக்குறி
நகைக்கிறது என்னை.

1 comments:

மிக நல்ல கவிதை... படிக்கலன்னாலும் சிலபேரு போடுற கணக்கு பிரமிப்பா இருக்கும்...

 

Post a Comment