பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

நண்பர்களாகப் பிரிவோம் என்றாய் நீ...




ஹக்...
கழுத்துக்கும் தோளுக்கும் இடையில்
எலும்புச் சந்துக்குள் அரை அடியைக்
கடந்தது ஈட்டி.
அதன் பின்னோக்கிய கூர்த்த
சிணுக்குகள் வலியின்
உச்சத்தைப் பரிசளித்தன.

ராட்ஷச மரங்கள் பச்சைப்
புள்ளிகளாய்,
ஏரியும் குளமும் நீரின்
துளியாய் தெரிய,
மலை உச்சி.
கால் கட்டை விரலுக்கு முன்னால்
சரேலென பாய்ந்த
பள்ளம் ;
உயரத்தின் பயத்தை
உள்ளங்கால்கள் உணர்த்திய போது,
கால்களுக்குக் கீழ்
பூமி நழுவியது.
த்தட்...

நீருக்குள் இருந்து காற்றுவெளியைத்
தேடிய கைகள் சலித்துப் போயின.
நுரையீரலின் கடைசிக் காற்றுக்
குமிழ் வெளியேறியது.
மூக்கை நம்பிப் பயனில்லை
சுவாசத்துக்காக துடித்த வாய் திறந்தபோது,
காற்றின் இடத்தை நீர்
நிரப்பியது.
ப்ளக்..

இப்படியான ஒரு சூழ்நிலையில்,
நண்பர்களாகப் பிரிவோம் என்றாய் நீ...

2 comments:

//சுவாசத்துக்காக துடித்த வாய் திறந்தபோது,
காற்றின் இடத்தை நீர்
நிரப்பியது.//

மயில்சாமி,

சோகத்திலும்.... ரசனையானதொரு அழகியல் சொற்கள்.

 

Post a Comment