பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

வா... வந்து தொலையுங்கள்ஏ... கூத்தாடிகளே!
வக்கற்றவன் ஒருவன்
வயிறெறிந்து சொல்கிறேன்
கேட்டுவிட்டுச் செல்லுங்கள்.

ஈனப்பிறவிகளால் எம்மினம்
சீரழிக்கப்பட்டபோது,
சகோதரன் என்றுதானே
கை நீட்டினோம்.
எதிரி கூட எம்மிடம்
இரக்கம் காட்டியிருக்கக் கூடும்
ஆனால், நீங்கள் துரோகிகள்


இங்கு
பாலுக்கழுத குழந்தையின்
வாயில் கந்தகத்துகள்கள்
எரிந்தன.
தாயின் கருவறை வாயில்கள்
கயவரின் கால்களால்
மிதியுண்டன.

அங்கோ...
பசப்பு வார்த்தைகளால்
பாலாபிஷேகம் செய்யும்
பாசத்தலைவனுக்கு
பாராட்டு விழா நடத்தினீர்.
தொடை தெரிய ஆடினீர்,
துண்டு போர்த்து பாடினீர்.


எல்லாம் முடிந்தது...
ரத்தச் சகதிக்குள்
புதைக்கப்பட்டது
ஓரினம்
எல்லாம்... முடிந்தது.

அன்று அழைத்தோம்
கதறல்களால் காடுகள்
கூட கருகிப் போயின.
நீங்கள் வரவில்லை
இன்று மறுத்தோம்
வருவதாய்த் தகவல்

வா... வந்து தொலையுங்கள்
எம் ரத்தச் சிதறல்களால்
அரிதாரம் பூசுங்கள்
சிசுக்களின் மண்டையோட்டில்
தேநீர் அருந்துங்கள்
நொறுங்கிய எம்
எலும்புகள் மீது
மேடை போடுங்கள்
உம் மதர்த்த முலைகள்
திமிரத்... திமிர...
ஆடுங்கள்
கொலை செய்த கைகள்
களைத்துப் போயிருக்கும்
சிரம பரிகாரம் செய்வியுங்கள்.
எம் பெண்களை
வன்புணர்ந்து வன்புணர்ந்து
அவர்களின் குறிகள்
வீங்கிப் போயிருக்கும்
வெஞ்சாமரம் வீசுங்கள்
அவர்கள் விட்டெறியும்
காசுகளால்
உங்களுக்கு உள்ளாடை
தைத்துக் கொள்ளுங்கள்.

அத்தோடு இந்த வக்கற்றவனின்
வரத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள்.

எம் பிணங்களின்
வாய்க்கரிசியில்
உமக்கான உணவு
சமைக்கப்படட்டும்
குடிநீர்க் குவளையில்
ரத்தம் ததும்பட்டும்
தூமைத் துணிகளில்
ஆடைகள் நெய்யப்படட்டும்
நும் மனைவிகளின்
வயிற்றில் கருந்தேள்
கருக்கொள்ளட்டும்
பூஜையறையில்
சாம்பிராணிக்குப் பதில்
சதைத்துணுக்குகள்
வேகட்டும்
உம் படுக்கை அறையில்,
கயவர்களால் சிதறடிக்கப்பட்ட
முதிராத என் தங்கையின்
கதறல் கேட்கட்டும்

வா... வந்து தொலையுங்கள்

13 comments:

அன்பு சக்தி ...
வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன் ...
வேறெதுவும் சொல்ல முடியவில்லை ...
வருகிறேன் நண்பரே !

 

urakkuma antha koothadikalukku.

K.Saravanan
Singapore

 

//வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன் ...//
எல்லாம் முடிந்து விட்டது....
நமது கையாலாகாத தனத்தை எண்ணி பெருமூச்சு விடுவதை தவிர செய்வதற்கு வேறெதுவும் இல்லை!

 

மரித்தவர்களின் கதறல்கள் செவியில் அடங்கும் முன்னே தாசிகளுடனும் வேசிகளுடனும் கூத்தாட தயாராகிவிட்டனர். வார்த்தைகள் மரிக்கின்றன,எஞ்சியிருந்த நம்பிக்கையையும் தொலைந்து விட்டது, பொய்த்துப்போன வாதங்களைக் கண்டு, அரிதாரமிட்ட ஆட்சியாளர்களை கண்டு...என்ன சொல்ல?

 

தமிழின துரோகிகலுக்கு இது உரைக்குமா?.

 

ஒவ்வொரு வரியிலும் நிஜம் உணர்ந்த கோபம், ஆதங்கம்..... புரியுமா அவர்களுக்கு?

 

Vanakkam Thambi,

Manitham innum marithu pogavillai yenbathu ungal varthaigalil irrunthu theregerathu.

Swamy.

 

@ நியோ
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சகா..
@ சரவணன்
ஒரு கூத்தாடியாவது செல்ல மறுக்கட்டும், உண்பது உணவாக இருந்தால்
@ துரோகி
///நமது கையாலாகாத தனத்தை எண்ணி பெருமூச்சு விடுவதை தவிர செய்வதற்கு வேறெதுவும் இல்லை///
உண்மை நண்பரே..
@ அன்னு
///மரித்தவர்களின் கதறல்கள் செவியில் அடங்கும் முன்னே தாசிகளுடனும் வேசிகளுடனும் கூத்தாட தயாராகிவிட்டனர். வார்த்தைகள் மரிக்கின்றன,எஞ்சியிருந்த நம்பிக்கையையும் தொலைந்து விட்டது, பொய்த்துப்போன வாதங்களைக் கண்டு, அரிதாரமிட்ட ஆட்சியாளர்களை கண்டு...என்ன சொல்ல?///
வழக்கம் போல் நினைவு நாள் அனுஷ்டித்து விட்டு ஊமையாகி விடுவோம்.

நன்றி அப்பாதுரை சார், கௌசல்யா, jey , சுவாமி அண்ணா, boss .....

 

உண்மைய சொல்லுங்க. நீங்க திருப்பூர் தானா நண்பா.

இது போன்ற படைப்புகளை பாராட்டும்போது எழுதியவரின் உணர்வுகளை கொச்சைபடுத்திவிடும் என்கிற என் நம்பிக்கை என்னை அச்சுறுத்துகின்றது. இந்த கவிதையை பாராட்டுவது கவிஞனை அவமதிப்பதாகிவிடுகிறது. எனவே உங்கள் உணர்வுகளுக்கு வணங்குகின்றேன்.

உங்கள் வருகைக்கு நன்றி

 

உங்கல் கவிதையில் வெளிப்பட்டிருந்த கோபமும் ஆதங்கமும் ஈழ சகோதரனின் குரலுக்கு நிகரான ஒன்றாக இருக்கின்றது என்பதைக் குறிப்பிடவே 'உண்மைய சொல்லுங்க. நீங்க திருப்பூர் தானா நண்பா' என பின்னூட்டமிட்டேன்.

உங்கள் கவிதைக்கான பாராட்டுதலே நண்பா.

இருப்பினும் உங்கள் அறிமுகத்திற்கு மிக்க மகிழ்ச்சி. இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

 

என்ன சொல்லுரதுன்னே தெரியல

 

Post a Comment