பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா வேண்டாமா?

பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா வேண்டாமா என்ற கடந்த 28 மார்ச்சில் இடப்பட்ட இடுகையின் தொடர்ச்சி...

சிறிய அறிமுகம்...
கேரளத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி நளினிஜமீலா பங்கேற்ற ஒரு விவாதத்தில் இருந்து. முன்னதாக அவர் சிறிய கருத்துரை ஒன்றை வழங்கியிருந்தார். அவரின் பேச்சைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடந்தது. முதலில் கேள்வி கேட்க பலரும் தயங்கினர்.
விவாதம் துவங்கும் போது கேள்வி கேட்க யாரும் இல்லை. ஒருவர் கேள்வி எழுப்பியதும், தயங்கித் தயங்கி கேள்வி கேட்டவர்கள், ஒரு கட்டத்தில் சூடுபறக்க விவாதத்தில் இறங்கினர்.
இனி விவாதத்தில் இருந்து....

கேள்வி:
* இத்தொழிலில் இருப்பவர்களை மீட்டு, கல்வி போன்ற வசதிகளைச் செய்து கொடுக்கலாமே. வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால், திருந்தி ஒழுக்கமாக இருப்பார்களே?
பதில்:
* ""இரண்டு காரணங்கள் உள்ளன. அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள எல்லாருக்கும் வேலை கொடுக்கும் சூழ்நிலை இங்கு இல்லை. இரண்டாவது விஷயம். இம்மாதிரி ஆட்கள் திரும்பிச் சென்று சமூகத்தில் உரிய மரியாதையுடன் வாழ முடியாது. பாலியல் தொழில் இல்லாமல் போக வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பமும். ஆனால், இருக்காமல் போகாது. பெண்ணடிமைத்தனமும், பெண்ணை அடிமையாக்கும் குறிக்கோளை மட்டும் கொண்டு செயல்படும் குடும்ப நிறுவன அமைப்பும் இல்லாமல் போனால், பாலியல் தொழிலும் இல்லாமல் போகும். அதுவரை பாலியல் தொழிலை அங்கீகரிப்பது மன்னிக்கவும் வரைமுறைப்படுத்துவது என்ற நிலைப்பாடு தேவை''
கேள்வி:
* புத்தகம் வெளிவந்த பின், உங்கள் மீதான குழந்தைகளின் மனப்போக்கு; அவர்களின் மீது சமூகத்தின் பார்வை எப்படி இருந்தது?
பதில்:
* ""இரு பெண் குழந்தைகளில் மூத்தவள், ஆரம்பத்திலேயே என்னை விட்டு பிரிந்து விட்டாள். இரண்டாவது பெண்ணை, புத்தகம் எழுதிய பின் பல சமூக விவாத மேடைகளுக்கு அழைத்து வந்திருக்கிறேன். அவளுக்குத் தெரியும். அம்மா ஒரு பாலியல் தொழிலாளி என்று; அவள் என்னைப் புரிந்து கொண்டிருக்கிறாள். சமூகம் அவளை மனரீதியாக துன்புறுத்தவில்லை''
கேள்வி:
* பாலியல் தொழிலை கட்டுப்படுத்த சட்டமே தேவையில்லை; அதை தனிமனித ஒழுக்கமாக மாற்றி விடலாம்; சட்ட மீறலாகவோ, குற்றமாகவோ பார்க்கத் தேவையில்லை என்பது பற்றி கருத்து?
""சட்டம் வேண்டாம் என்று சொல்ல முடியாது. சுய விருப்பத்துடன் பாலியல் தொழிலுக்கு வந்தவர்களும், விபத்தாக தள்ளப்பட்டவர்களும் உண்டு. விபத்தாக தள்ளப்பட்டவர்கள், சமூக வாழ்க்கைக்கு திரும்ப, சட்டம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். பாலியல் தொழில் என்ற பெயரில், ஒரு பெண்ணை விற்பனை செய்ய சட்டம் தடையாக இருக்கும். எனவே, சட்டம் தேவை. ஆனால், ஒரு திருத்தம். இரண்டு பேர் சேர்ந்து விரும்பி இருக்கும் போது, அவர்களைக் கைது செய்யக்கூடாது. அவர்களைக் கேலி, கிண்டல் செய்யக்கூடாது என்பதே என் கண்ணோட்டம்''
கேள்வி:
* ஆண்களுக்கு பாலியல் வடிகால் தேவை காரணமாகவே, வெளியில் பாலியல் சீண்டல்களும், பாலியல் ஒடுக்குமுறைகளும் எழுகின்றன என்பது பொதுவான கருத்து. அப்படியானால், சட்டரீதியாக பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில், பெண்களின் மீது பாலியல் ஒடுக்குமுறையும் சீண்டல்களும் இல்லையா? அது சாத்தியமாகி இருக்கிறதா?
பதில்:
* டாக்டர் ஒருவர் குறுக்கிட்டு, ""ஆண்களின் வடிகாலுக்காக, பெண்கள் சார்ந்த பாலியல் தொழில் உள்ளது என்றால், பெண்களும் அவர்களின் வடிகாலுக்காக, ஆண் பாலியல் தொழிலாளர்களிடம் போகலாமா என்ற விவாதம் எழும். அப்படி யதார்த்தம் எழுமானால், அதையும் அங்கீகரிக்கலாம். பொருளாதார சுதந்திரம் வளமை பெற்ற மேட்டுக்குடிப் பெண்களில், அப்படிப்பட்ட ஒரு பிரிவும் இல்லாமல் இல்லை. சமூகத்தில் அப்படியும் ஒரு சிறு பிரிவு இல்லாமல் இல்லை,'' என்றார்.

தீர்க்கமான கருத்துகளை முன்வைத்த ஜமீலா, ""தாய்லாந்து, கோல்கட்டா, மைசூர் பகுதிகளை உதாரணமாகக் காட்ட முடியும். மைசூரில் நான் செக்ஸ் ஒர்க்கராக இருந்துள்ளேன். அங்கு பஸ்சில் இருந்து இறங்கிய உடனே மிக சுதந்திரமாக நடந்திருக்கிறேன்.
கோல்கட்டாவில் சோனாகாச்சி என்ற இடத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். எச்.ஐ.வி., விழிப்புணர்வு தொடர்பாக, அங்கே சென்ற போது, இரவு 12.00 மணிக்கு மதுக்கடையில் மது அருந்தி விட்டு, ரோட்டில் மிக சுதந்திரமாக உலவி இருக்கிறேன். கேலி, கிண்டல் இல்லை.
தாய்லாந்தில் சுகப்பேரியா என்ற பகுதி உள்ளது. புதிதாக திருமணமான தம்பதியினர், தன் தோழர்களுடன் சேர்ந்து அங்கு நடக்கும் "செக்ஸ் ஷோரூம்' நிகழ்ச்சிக்கு செல்வர். அங்கு, பாலியல் தொழிலாளி நிர்வாணமாக பல்வேறு விளையாட்டுகள், செயல் முறைகளை விளக்குவர். அதைப்பார்க்க நிறைய பேர் வருவர். அந்த புதுமண தம்பதியினர் இதில் வெட்கப்படுவதில்லை; அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதில்லை.
"தேவையான பொருள், தேவையான இடத்தில் கிடைக்கும் போது, தேவையில்லாத சீண்டல்கள் இருக்காது,' என்பதே என் கருத்து. அதற்காக ஒரு குடும்பப் பெண்களின் மீதான சீண்டல் முற்றிலும் இருக்காது என்று கூறவில்லை; மிக மிகக் குறைந்து விடும் என்கிறேன்,'' என்றார்.

ஒரு இளம்பெண் குறுக்கிட்டு, "தாய்லாந்து சென்றிருக்கிறேன். அங்கு பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. லாங்சபாங் என்ற பகுதியில் இதுதான் பிரதான தொழில். அடையாள அட்டை, தடுப்பு உபகரணங்கள் என அனைத்து விஷயங்களும் உண்டு. பாலியல் தொழிலாளிகளை அனைவரும் மதிக்கின்றனர். ரோடுகளில் சீண்டல் இல்லை.
ஆனால், எளிதாக இத்தொழிலில் காசு கிடைக்கிறது என்பதற்காக, இளம்பெண்கள் நிறைய பேர் வேலைக்குச் செல்வதில்லை; படிக்க செல்வதில்லை, என்ற புகார் உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால், தொழில் துறை ஸ்தம்பிக்கிறது, என்ற குற்றச்சாட்டும் உள்ளது,'' என்றார்.

"கஷ்டமில்லாத' என்ற வார்த்தையை மறுத்தபடி பேசினார் ஜமீலா. ""கோல்கட்டாவில், செக்ஸ் ஒர்க்கராக இருந்து கொண்டு, படித்து டாக்டரானவர்களும் உண்டு. பாலியல் தொழில் சுலபமானது இல்லை. கண்ணுக்கும் மனதுக்கும் பிடிக்காதவர்கள் வருவர். காசு கொடுக்காமல் ரகளை செய்பவர்களும் உண்டு. பாலுறவு, ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ வாரத்துக்கு ஒரு முறையே தேவைப்படும்.
ஆனால், தொழிலாக செய்யும் போது பலமுறை உறவு கொள்ள நேரிடும். அது கஷ்டம்தான். பணம் சம்பாதிக்க எளிது, ஈசி என்பதால், தொழிலில் இறங்கி விடுகின்றனர் என்று கூறி விட முடியாது. மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், சமூகரீதியாகவும் பாதிப்பு உண்டு.
மனைவியை இரண்டாம் முறை நெருங்கினால், <உடல்வலியால் மறுக்கின்றனர். அப்படியானால், பாலியல் தொழிலாளிக்கு ஏன் கஷ்டம் இருக்காது. நாங்களும் சாதாரண பெண் போன்ற உடலமைப்பு கொண்டவர்கள் தானே. சிலர் எங்களை அடிக்கும் போது, "ஓ' என கத்தக்கூட முடியாது. வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டால், அது கவலைப்பட வேண்டிய விஷயம்''
கேள்வி:
* பாலியல் தொழிலுக்கு அங்கீகாரம் தேவையா?
பதில்:
* ""தேவையற்ற பாலியல் கட்டுப்பாடுகள், அத்துமீறலுக்கு காரணமாக இருக்கின்றன. அதற்காக, எல்லாரும் இத்தொழிலுக்கு வந்து விடுங்கள் என்று அர்த்தமில்லை. பாலியல் கல்வி அனைவருக்கும் தேவை. சில எழுத்தாளர்கள் சொல்வது போல், பாலுறவு என்பது சொர்க்கானுபவம் இல்லை. சின்ன உணர்வு அவ்வளவே. நமக்கு சாதாரணமாக சிறுநீர் கழிக்கும் முன் ஏற்படும் உணர்வும்; கழித்த பின் கிடைக்கும் நிம்மதியையும் போன்றதே. மிக உயர்ந்த அனுபவம் எல்லாம் கிடையாது. ஆண் என்றால் இவ்வளவுதான், பெண் என்றால் இவ்வளவுதான், என இளைய தலைமுறைக்கு தெரியவைத்து விட்டால் போதும். பாலியல் அத்துமீறல்கள் குறைந்து விடும்.
பாலியல் தொழில் இருக்க வேண்டும்; இருந்தே தீர வேண்டும் என்று கூறவில்லை; பாலியல் தொழில் பாதுகாப்பு இயக்கம் எதையும் நடத்தவில்லை. ஆனால், பாலியல் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படாத போது, வரைமுறைக்குள் கொண்டு வரப்படாத போது, ஏராளமான தவறுகள் ஏற்படுகின்றன.
செய்தித்தாள்களில் குற்றம் தொடர்பான செய்திகள் பெரும்பாலும் செக்ஸ் தொடர்புடையவையாகவே இருக்கின்றன. பாலியல் தொழில் என்பதை தவிர்க்கவும், ஒழிக்கவும் முடியாத நிலையில், அதை வரன்முறைப்படுத்துவதில் தவறு இல்லை. உச்சநீதிமன்றமும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளது,'' என்றார்.

இப்படியாக விவாதம் நீண்டு கொண்டே இருந்தது. பாலியலைப் பற்றி சமூகத்தின் ஒரு தரப்பு என்ன நினைக்கிறதோ இல்லையோ; பெரும்பான்மை இளைய சமுதாயம் தெளிவாகவே இருக்கிறது.
வேண்டும், வேண்டாம் என்று சொல்லி விட, அது கடைச்சரக்கு இல்லை. தேவையற்ற கட்டுப்பாடு, விதிமீறலுக்கு வழி வகுக்கும். காட்டாற்று வெள்ளமாக கட்டவிழ்த்து விட்டால், கரையை உடைத்து விடும். கவனமாகக் கையாள்வது அவசியம். விவாதத்தில் பங்கேற்றவர்களில் பால்பேதமில்லை. பாலுக்கும், பாலியலுக்கும் அப்பாற்பட்டவர்களாகவே, பேச்சு இருந்தது. யாராகினும் விவாத அரங்கில் பங்கேற்றிருந்தால், இளைய சமுதாயம் தறிகெட்டுத் திரிகிறது என்ற வாக்கியத்தை சந்தேகமில்லாமல் வாபஸ் வாங்கி இருப்பர்!
இனி உங்களின் கருத்துகளை வரவேற்கிறேன்

6 comments:

வணக்கம் தோழரே,

சில வரைமுறைகளுடன் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. சமூகத்தின் அங்கீகாரம் வழங்கப்படாமையாலேயே பாலியல் தொழில் செய்பவர்களை ஏளனமாகப் பார்க்க வேண்டி ஏற்படுகிறது. ஆனால், அதே சமூகத்திலேயே பாலியல் தொழிலாளர்களை நாடிச் செல்லும் வாடிக்கையாளர்களும் இருக்கின்றனர்.

தாய்லாந்து அரசாங்கம் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் வரை பாலியல் தொழிலை அதிகளவில் வரவேற்று தம்நாட்டு பெண்களிடம் பிரச்சாரம் செய்தது. அதுவும், அந்நாட்டு அமைச்சர் ஒருவர், தாய்லாந்தின் சுற்றுலாத்துறையின் வருமானத்தில் பெரும்பகுதியை ஈட்டித்தருபவர்கள் பெண்களே என்றும், அவர்களை தாய்லாந்து அரசு கௌரவத்துடன் காண்பதாகவும் கூறியிருந்தார்.

இந்தியா என்ற ஒரு நாட்டுக்குள்ளேயே ஒவ்வொரு மாநில அரசும் பாலியல் தொழிலாளர்களை ஒவ்வொரு விதமாக கையாள்கிறது. அத்துடன், அதிகளவில் சட்டம் போட்டாலும் பாலியல் தொழிலைத் தடுக்க முடியாது. ஆகவே, சில வரைமுறைகளுடன் பாலியல் தொழிலை அங்கீகரிப்பதே சிறந்தது. அப்படி செய்வதனால் பாலியல் குற்றங்கள் குறையலாம்.

நன்றி,

‘மருதமூரான்’ என்கிற புருஜோத்தமன் தங்கமயில்.

 

முதல் வருகைக்கும், ஆழமான கருத்துரைக்கும் நன்றி நண்பரே. சில வரைமுறைகளுக்கு உட்பட்டு, என்பதில்தான் சிக்கல் இருக்கிறது. எவ்விதமான வரைமுறை என்பதே கேள்வி. நீங்கள் சொன்னது போல், ஒருங்கிணைந்த இந்தியாவில், பாலியல் தொழிலுக்கு வெவ்வேறு சட்டங்கள். சோனாகஞ்ச், மும்பை, கேரளா, கோவா, பாண்டிச்சேரி என சற்றே அகலக்கால் வைத்தால் வேறு சட்டதிட்டங்கள் வந்து விடுகிறது. உல்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

 

சார்... மொதல்ல பாலியல் தொழில்னு சொல்றத நிறுத்துங்க சார்... பெரியார் சரியா சொன்னார்... சாதியை ஒழிப்பதற்க்கு ஒரு வழி,பெயருக்கு பின்னால இருக்கிற சாதி அடயாளத்தை நீக்க வேண்டும்னு... அதேமாறிதான் இது... பாலியல் தொழில்,பாலியல் தொழில்னு சொல்லி சொல்லியே அதுவும் ஏதோ தொழில் பொலனு விஷயம் தெரியாதவன் தப்பான புள்ளியிலுருந்து படம் வரய கத்துக்கொடுக்றாப்ல ஆகிபோச்சு...எந்த பொன்னும் இப்படி சம்பாதிக்கனும்னு நினைக்கமாட்டா... but exceptions are always bound to be there.. அப்படி நினைகிறவங்க வேனும்னா ஒன்னா சேந்து பாராளுமன்ற குழு அமைத்து... அறிக்கை சமர்பித்து... சட்டங்கள் உருவாக்கி கொள்ளட்டும்... மத்தபடி... for some silly reasons.. legalaising... this...எனக்கென்னமோ சரியாபடல...

 

i don blog much so jus now seen ur comment for my blog.. see my stand is simple... paaliyal thozil ulagin pazamayana thozil ok but mathavanga eppdinalum irukatum sir
"parathayar ozukam" --- > ithu 2000 varushama irukungrathunala it is no wright if u don like that be in a group which opposes that... athai adharikara group irunthutu potum atha pathi namakenna kavala? i belong to the group which strictly opposess that.... because atharku muladhanamaga pen ena padubaval neengal solginra vanmurainalu illai varumainaalo etho oru karanathal varugirale ozinthu viruppappatu varuvathillai appdi irukum bothu atha thozil nu solratho satta purvama aakarthoo utter waste... ungaluku matru karuthu irunthaal kandippaga vaithukollungal nutrirku aimabthi onru ethuvo athan padiye naanum... janayagathil nambikkai ullavan nalaiku neengal sollumbadi indhiya arasangam paliyal thozilai angigarithal siram thazthi erkum athe velail antha mudivil enaku udanbadu illai enbathai varuthathudan therivithu kolgiren...


amma innoru kelvi... pori iyal padithathaal thamiz therinthiruka nyayam illaya...? epdi neenga patha pori iyal manavarkalem appadiyo ennavo... unga alavukku nannuluku vilakkam tharum thiramai illavittalum naanum agathayum purathaiyum padithu valarthavanthaan enbathai thazamaiyuda therivithu kolgiren..... (oru vela edai idail english la post paninathala atha pathu sollittengalo ennamo...)

 

i don blog much so jus now seen ur comment for my blog.. see my stand is simple... paaliyal thozil ulagin pazamayana thozil ok but mathavanga eppdinalum irukatum sir
"parathayar ozukam" --- > ithu 2000 varushama irukungrathunala it is no wright if u don like that be in a group which opposes that... athai adharikara group irunthutu potum atha pathi namakenna kavala? i belong to the group which strictly opposess that.... because atharku muladhanamaga pen ena padubaval neengal solginra vanmurainalu illai varumainaalo etho oru karanathal varugirale ozinthu viruppappatu varuvathillai appdi irukum bothu atha thozil nu solratho satta purvama aakarthoo utter waste... ungaluku matru karuthu irunthaal kandippaga vaithukollungal nutrirku aimabthi onru ethuvo athan padiye naanum... janayagathil nambikkai ullavan nalaiku neengal sollumbadi indhiya arasangam paliyal thozilai angigarithal siram thazthi erkum athe velail antha mudivil enaku udanbadu illai enbathai varuthathudan therivithu kolgiren...


amma innoru kelvi... pori iyal padithathaal thamiz therinthiruka nyayam illaya...? epdi neenga patha pori iyal manavarkalem appadiyo ennavo... unga alavukku nannuluku vilakkam tharum thiramai illavittalum naanum agathayum purathaiyum padithu valarthavanthaan enbathai thazamaiyuda therivithu kolgiren..... (oru vela edai idail english la post paninathala atha pathu sollittengalo ennamo...)

 

”பாலியல் தொழிலால் பாதிக்கப்பட்ட ஜமீலா ....” தல.. நீங்களே சொல்லிட்டீங்கோ... நான் ஏற்கனவே சொல்லியது போல சம்பாதிப்பதற்காக அதை தொழிலாக அங்கிகரிப்பது தவறு...கிரினாக சொல்லனும்னா.. சினிமால காட்டுவாங்களே... அப்பாக்கு மருந்து வாங்க காசில்லாமயோ , இல்ல தம்பிக்கு ஸ்கூல் ஃபீஸ் , காலேஜ் ஃபீஸ் கட்ட காசில்லாம ஒரு பொன்னு ரோட்லயோ அழுதுகிட்டு இருக்கும்... வாம்மா உனக்கு நல்ல வழி காட்றேன்னு வாயில வெத்தல போட்டுகிட்டு கைல ஒரு பேக்கோட ஒருத்தன் வருவான். இல்ல குண்டா காஸ்ட்லி பொடவ கட்டிட்டு ஒரு பொம்பள வந்து ஆதரவா கூட்டிட்டு போகும். கடைசில கொண்டு போய் ஒரு எடத்துல வுட்ருவாங்க அது எங்கனு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்ல.. அந்த எடத்த அரசாங்கம் அங்கிகரிக்கனும் நீங்க சொல்றிங்கா சாரி நம்ம சொல்றோம்... மத்தபடி... உடற்ப்பசிக்காக போற பெண்னுக்கும் , ஆணுக்கும், “அதுல எனக்கு நிறய காசு பாக்கலாம்..” னு போற பெண்னுக்கும் (ஆணுக்கும் கூடதான் ஏன்னா ஆனும் பெண்னும் சமம் இல்லயா..! இப்பலாம் கால் பாய்ஸ்னு வேற சொல்றாங்க..) கண்டிப்பா “sexual recreation centeres..” லிகலைஸ் என்ன லீகலைஸ்.. அரசாங்கமே டாஸ்மார்க் மாறி தாராளமா நடத்தாலாம்.. குடி குடியை கெடுக்கும்னு தெரிஞ்சும் குடிக்கறவன நாம எதுவும் செய்ய முடியாது இல்லயா...! இன்னொரு பதிவில் அனதர் பின்னூட்டம் இட்டுள்ளேன் நேரம் இருந்தால் கவனிக்கவும்...

 

Post a Comment