பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

பிணமும் பொருதும் உன்னோடு



பிணமும் பொருதும் உன்னோடு


நானா உன்னோடு தோற்றவன்,
உன்படைக்கு கூற்றுவன்.
சிங்கமும் புலியும் பொருதியதில்லை
பொருதிய பொழுதுகளில் புலிகள் தோற்றதில்லை.
ஒற்றைப்புலியை கற்றைச் செந்நாய்கள் சூழ்ந்தன.

தைரியமற்று அல்ல; தற்காப்புக்காக
சற்றே நகர்ந்தோம் பின்நோக்கி.
பின்வாங்கலுக்கு பெயர் அல்ல தோல்வி,
எம்மை நம்பி இருக்கும் சில இன்னுயிர்களுக்காக
சிந்தினோம் ரத்தத் துளிகளை
சிந்திய ஒரு துளி ரத்தமும்
உன் உயிர்குடிக்கும்,
எங்கள் மூச்சுக் காற்றில் அனல்பறக்கும்.
மரணம் ஒன்றும் மிரட்சி அல்ல
நாங்கள் மரணமே அஞ்சும் புரட்சி.
சில கரங்கள் நீளுமென காத்திருந்தோம்
கறைபடாமல் வெல்லவே நினைத்திருந்தோம்
காலம் கைவிரித்தது . . .
புலிகளின் பலிகள் எண்ணில் அடங்கும்,
இனி எதிர்ப்பவர் பிணங்கள் மண்ணில் அடங்கும்.

ஏ. . . என் மிருகம் போன்ற எதிரியே
மிச்சமிருக்கும் உன் சக்தியை
திரட்டி வைத்துக் கொள்
சங்கத் தமிழனின் எச்சம் சொல்கிறேன். . .
எங்களுக்கான முறை இந்த வினாடியில்
துவங்குகிறது.
இனி
அச்சம் என்ற வார்த்தையின் உச்சம் அறிவாய்,

புராண நந்தியின் சாபம் தெரியுமா?
’குரங்கால் அழியும் உன் தேசம்’
ராவணனுக்கு பலித்தது.
’கொரில்லா’வும் ஒரு குரங்குதானே
இனிப்பார். . .
ரத்தநாளம் கண்ணில் தெரிய,
எதிரியின் ரத்தம் மண்ணில் தெறிக்க,
எழுவான் எழுவான் எங்கள் தமிழன்.
பயமே பயமே விலகிச்செல்,
புரட்சி வீழ்வதில்லை உரக்கச் சொல்!

எச்சரிக்கிறோம் பிணந்தின்னிகளே,
எதிரிகள் தேகம் எரியூட்ட புறப்பட்டோம்,
அட, மிருகமே விலகிச் செல்
அவகாசம் தருகிறோம் மண்டியிடு!
ஆயிரம் படைகள் வந்தால் என்ன?
உதவிக்கரங்கள் மறுத்தால் என்ன?
ஒவ்வொரு முறையும் பலியெடுப்போம்,
உன் பிணத்துக்கு கூட வலிகொடுப்போம்.
அடச்சே. . . . இனிச் சொல்வதற்கென்ன
எம் பிணம் கூட பொருதும் உன்னோடு

நானா உன்னோடு தோற்றவன்,
உன்படைக்கு கூற்றுவன்.

0 comments:

Post a Comment