
இரை+ஆண்மை
இரையாண்மை
நின்றதின் மேல் வருமொழி புணர்ந்தது
"ஐ' வழி(லி)யால்,
"ய'வ்வெனத் திரிந்தது உயிர்; கிடந்தது உடல்.
உடல் மேல் உடல் வந்து யவ்வியதில்,
'ஆ'காரமும், ஆகாரமும் அடிபட்டுப் போனது.
இறை ஆண்மை கெட்டதால்,
இரை பெண்மை கெட்டது.
இரையே இங்கு வரவேற்றதால்,
வந்து புணர்ந்ததெல்லாம்,
வன்புணர்ந்தது.
வழுக்கல் என்பதால்
வழு, வழுவமைதி ஆனது
புணர்ச்சியின் இறுதியில்,
திரிந்தது ஆண்மை;
இறைஞ்சிய போதும்
எஞ்சியது இரை.
சொல், பொருள்
எப்படி நோக்கினும்
இது விகாரப்புணர்ச்சி
7 comments:
பாற்க்கடல், என்ன சிறுபத்திரிக்கைகளுக்கு அனுப்பலையா????
கொஞ்சம் புரியுது, மிச்சம் புரியலை. இது என் விதி.
வார்த்தை ஆட்டம் அருமை, அந்த 'வார்த்தையாட்டம்'
அவர்கள் வெளியிடும் வரை எனக்கு பொறுமை இல்லை, சகா சிவா ...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வாசன்.
(வாசன் இந்த பேரு ..... இந்த பேரு ஓ, அதே அதே)
இறைஞ்சிய போதும்
எஞ்சியது இரை.
சொல்லருமை பொருளருமை
எனக்குத் தமிழ் புகட்டிய ஆரோக்யசாமியை நினைவுபடுத்துகிறது புணர்ச்சிவிதி. வார்த்தைகளின் ஜாலம் உருபு மயக்கத்தையொத்த போதையைத் தருகிறது.
உங்களைப் பற்றிய தகவலில் உங்களின் சுயம் தெரிகிறது.வரும் நாட்களின் மீதான நம்பிக்கையும் வலுக்கிறது மயில்சாமி சக்திவேல்.
நிறைய எழுதக் காலம் கைகூட வாழ்த்துகிறேன்.
Wow!!! Excellent
இறையாண்மையை ஆண்மைக்கு இரையாக்குவது போல் ...
Post a Comment