பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

நினைவு(வ)றுத்தல்



மின்னொடு வானம் தண்துளி தூவ,
கிள்ளைப் பார்ப்பின் மூக்கினை ஒத்த
செம்பரிதி அமிழும் காஞ்சனப் பொழுதில்,
வெரூப் பாலையின் பெரும்பசி வயிற்றோன்
கொள்ளும் கவளத்துட் சிறுபரல் போல்
இடறுமுன் நினைவை;
கொல்லேற்றின் ரணம் படர் கழுத்தை
அழுத்திச் சிவந்த நுகத்தடியதனை
இரையென விழுங்கி,
குறுமரம் சுற்றும் வனத்து அரவமாய்
செரித்திட நினைக்கையில்,
கிழியுதென் யாக்கை

3 comments:

நினைவு செரிக்க வேண்டாம் ...
படர்ந்து எழுந்து படைக்கட்டும் கவி

 

செறிவான மொழியும் நயமான உவமைகளும் களிகொள்ளச் செய்கின்றன.நுகத்தடியதனை இரையென விழுங்குவது ரணம்.

 

நிறுத்தி, பதம் பிரித்து பொருள் உணர்ந்தேன். பழந்தமிழின் இறுதி வரிகளில் இன்றைய மனிதன் வெளிப்பட்டுவிட்டார் என்று தோன்றியது. தொடர்ந்து எழுதுங்கள்.புதிய வாசிப்பு அனுபவமாக இருக்கிறது. தவிர தற்கால வாழ்வின் பாலையும் மனதுள் வந்து போனது.

 

Post a Comment