பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

சாக்தம்


அணிகளைந்து
ஆடையவிழ்த்து
பூ அகற்றிய பின்
ஊற்றிய நீர்
பிறைநெற்றிச் சாந்தழித்து
நேரிள கொங்கை நனைத்து
இடை வழிந்து
நாபி நிறைத்து
மேழி நிகர்த்த கால்கள் தழுவி
விரல்வழிச் சொட்டியது.

ஆடவன் விரல்கள்
அங்கம் தடவின;
அலங்கரித்தன

திரை விலகியதும்
தூர நின்று
தரிசித்த பெண்டிர்க்கு
ஆயிரம் கசைகள்
அணைந்து பிரிந்த
அவஸ்தையில்
தொடையிடுக்கியபடி
அருள்பாலிக்கத் துவங்கினாள்
முயங்குபூண் முலையம்மன்சாக்தம்--சக்தி வழிபாடு

3 comments:

ஆயிரம் கசைகள்??...மற்றபடி மிக அருமை..

 

அலைகள் அசைக்காத குளமென்று தோற்றம் தரும் குளத்துக்கும் எத்தனை அலைகள்?

சக்தியைப் பெண்ணாய்ப் பாவித்து சிலையின் வதனம் தொட்டுப் பார்த்த சொற்கள்.

அபாரம் சக்தி.

 

நன்றி சுந்தர்ஜி...

நன்றி சிவா...
கசையினைச் சவுக்கெனக் கொள்க இவ்விடத்து...

 

Post a Comment