பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

இடந்தலைப்படுதல்


முட்டுச்சந்து,
முடைநாற்றத்துடன்
கோணியே சுவராய் ஒரு மறைவிடம்,
புளியமரம் புறங்கடை ஒதுக்கு,
மேற்கூரையின் விரிசல்களுக்கிடையே
பல்லிகளூரும் பாழறை...
ஏதோ ஓரிடம்
உராய்ந்து விட்டுப் போகிறது கழுதை
சுவருக்கென்ன சுகம்?

4 comments:

இடம் கொடுத்த சுகம் இருக்குமோ?

கவிதை சில விசயங்களை சொல்கிறது...

 

@ வினோ
நன்றிகள் நண்பரே, வருகைக்கும் வாசிப்பிற்கும்.

 

குறிப்புப் பொருளாய் இருக்கும் மனுஷியின் அவலம் நெஞ்சைத் தைக்கிறது. விரக்தி கூடிய வரிகள் என்பதாகவும், சமூகம் நோக்கிய கவிஞரின் கேள்வி என்றும் வாசிக்க வைத்தது. நல்ல எழுத்து. மேலும் எழுதுங்கள்.

 

எல்லா கவிதைகளும் ரொம்ப அற்புத இருக்கு. சக்தி சிவம் நல்ல ரசனை.

 

Post a Comment